மே 24 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் அமுலாகும் வகையில் இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரை 338 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 420 ரூபாவாகும்.
அத்துடன் ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 337 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 450 ரூபா என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 400 ரூபா வரையிலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 445 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விலை அதிகரிப்புக்கு சமாந்திரமாக தாமும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.