November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

21 ஆவது திருத்தத்தை கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்க முடிவு!

ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் 21 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபை அரசியல் கட்சிகளின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வதற்காக அனுப்பி வைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சரினால் இன்று 21 ஆவது திருத்த வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் அது அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து அது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடுகளை பெற்று அதனை அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்தல், பாராளுமன்றத்தினதும் மற்றும் தற்போதைய ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை அதிகரித்தல், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத்தில் பதவிகளை வகிக்க முடியாத வகையிலான திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக 21 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.