பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இன்று முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.
ஏற்கனவே 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையிலேயே இவர்கள் இன்றைய தினம் பதவியேற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்களின் விபரங்கள்
01. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்
02. பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் , வெகுஜன ஊடக அமைச்சர்
03. கெஹலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல் அமைச்சர் (சுகாதார அமைச்சுக்கு மேலதிகமாக)
04. மஹிந்த அமரவீர – கமத்தொழில் அமைச்சர், வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர்
05. ரமேஷ் பத்திரன – கைத்தொழில் அமைச்சர்
06. விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
07. அஹமட் நசீர் – சுற்றாடல் அமைச்சர்
08. ரொஷான் ரணசிங்ஹ – நீர்ப்பாசன அமைச்சர், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்