November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் இலங்கை வந்தடைந்தன!

தமிழக்கத்தில் இருந்து இலங்கை மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (2 பில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்புள்ள அரிசி, பால்மா, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன், கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து கப்பல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் ஏற்பாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் கப்பலை அனுப்பி வைத்தார்.

குறித்தக் கப்பல் இன்று பிற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கை வந்துள்ள நிவாரணப் பொருட்களில் 9000 மெட்ரிக் டொன் அரிசி, 50 மெட்ரிக் டொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டொன்களுக்கும் மேற்பட்ட 55 வகையான அத்தியாவசிய மருந்துகள், 2 வகையான சிறப்பு மருந்துகள் என்பன உள்ளடங்குகின்றன.

நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததும், அங்கு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவற்றை உத்தியோகபூர்வமாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கையளித்தார்.