இலங்கை முழுவதும் எதிர்வரும் நாட்களுக்குள் எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தேவையில்லாது வரிசையில் காத்திருக்கவோ அல்லது எரிபொருளை வீடுகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்க வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்ககளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
அதிகளவில் எரிபொருளை பெற்று அவற்றை களஞ்சியப்படுத்தி வைத்து, அவற்றை கூடிய விலைகளுக்கு விற்பனை செய்யும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், இதனை தடுக்கும் வகையிலேயே சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.