November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சரவைக்கு வரும் 21 ஆம் திருத்தம்!

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தும் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கான 21 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த வரைபு மே 23 ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கிய பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமையைக் கொண்வர்களுக்கு பாராளுமன்றம் வர முடியாத முடியாத வகையில் தடைகளை ஏற்படுத்தவுள்ளதாகவும், இந்த தடை இப்போது இரட்டைக் குடியுரிமையை கொண்டு பாராளுமன்றத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கமை முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, எம்.பி ஆசனத்தை இழக்கும் நிலைமை ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.