உயர் தேசிய டிப்ளோமா (எச்.என்.டி) மாணவர்களினால் கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
காலிமுகத்திடலில் ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.
இவர்கள் கோட்டையில் உள்ள உலக வர்த்தக கட்டடத்திற்கு அருகில் உள்ள வீதி ஊடாக காலி முகத்திடல் பக்கம் செல்ல முயன்ற போது, அந்த வீதியில் அவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார், மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்த முடியாதவாறு பொலிஸார் ஏற்கனவே நீதிமன்ற தடையுத்தரவை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.