வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் பிரதேசங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் தற்போது கட்டம் கட்டமாக வழமைக்கு திரும்பி வரும் நிலையில் சில பிரதேசங்களில் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நடந்துகொள்வதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கேட்டு வரிசையில் நின்றும் மற்றும் வீதிகளை மறித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் எரிபொருளை கொண்டு செல்லும் பவுசர் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில இடங்களில் திட்டமிட்ட குழுக்கள் வீதிகளில் செல்லும் எரிபொருள் பவுஸர்களை வழிமறித்து தமது பிரதேசத்தில் எரிபொருளை இறக்காவிட்டால் தீ வைப்பதாக கூறி அச்சுறுத்துவதாக தகவல் வெளியாகி வவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்தால், எரிபொருள் பவுஸர் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.