இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் மே 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் இரத்தாகியுள்ளது.
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு மே 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
அரசியலமைப்புக்கமைய அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து 14 நாட்களுக்குள் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
ஆனால் 6 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு நேற்று வரையில் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை.
இதன்படி அந்தச் சட்டம் நேற்று முதல் தானாகவே இரத்தாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பேராசியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.