இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண உதவிகளை வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள செந்தில் தொண்டமான் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இன்றைய தினம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர்.
இதன்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு இலங்கை சார்பில் நன்றி தெரிவித்துள்ள இவர்கள், இக்கட்டான சூழ்சிலையில் இருந்து இலங்கையை மீண்டெழ இந்திய அரசாங்கத்தின் ஒத்ழைப்பையும் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியா அவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கைக்கு சாதகமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் இந்தியா முன்னெடுக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.