அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சர்களாக பதவியேற்ற ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பீடம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இவர்கள் இருவரும் கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் 9 பேருக்கு இன்று அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதன்போது ஹரீன் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும் மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் அரசாங்கத்தில் இணையக் கூடாது என்ற கட்சியின் தீர்மானத்தை மீறி பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இதற்கமை அவர்கள் இருவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.