பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் 9 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் இதன்போது அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
புதிய அரசாங்கத்தில் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள நிலையில் ஏற்கனவே தினேஸ் குணவர்தன உள்ளிட்ட நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளதுடன், இன்றைய தினம் மேலும் 9 பேர் பதவியேற்றுள்ளனர்.
இதன்படி இதுவரையில் 13 பேர் பதவியேற்றுள்ள நிலையில், இன்னும் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
எனினும் நிதி அமைச்சர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை.
புதிய அமைச்சர்கள் விபரங்கள்
- நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர்
- சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
- கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்
- விஜேதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
- ஹரீன் பெர்னாண்டோ – சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்
- ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்
- மனுஷ நாணயக்கார – தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
- நளின் பெர்னாண்டோ – வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்
- டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்