November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

200 ரூபாவை நெருங்கும் பாண் விலை!

கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கு அமைய பாண் இறாத்தல் ஒன்று 170 முதல் 180 ரூபா வரையான விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பணிஸ் உள்ளிட்ட மற்றைய உணவுப் பொருட்களின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.