இலங்கை முழுவதும் அனைத்து பாடசாலைகளுக்கும் மே 20 தொடக்கம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை நாளை முதல் நிறைவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், அதனை இன்று முதல் நிறைவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஜுன் 6 ஆம் திகதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.