யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சேவையை நினைவுகூர்ந்து தேசிய படைவீரர்கள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இது தொடர்பான பிரதான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்ல தேசிய படைவீரர் நினைவு தூபிக்கு அருகில் நடைபெற்றது.
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.