May 5, 2025 7:08:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி!

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இந்த நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.

2 நிமிட அகவணக்கத்தோடு ஆரம்பமான நினைவஞ்சலி  நிகழ்வை இறுதி யுத்தத்தில் தாய், தந்தையை இழந்த பல்கலைக்கழக மாணவன் பொதுச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.

ஏனைய சுடர்களை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், கல்விசார பணியாளர்கள், மாணவர்கள் ஏற்றினர்.

தொடர்ந்து நினைவுத்தூபிக்கு மலர் தூவி அங்கிருந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.