முன்னர் அறிவிக்கப்பட்டவாறு இன்றைய தினத்தில் எரிவாயுவை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
2,800 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதை அடுத்து, எரிவாயு சிலிண்டர்களை மே 18 முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்றைய தினம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கப்பல்களில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாமல் போனதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனால் எரிவாயு விநியோகம் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதனால் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பது பலனில்லை என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.