January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றுவோருக்கான அறிவித்தல்!

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கைகளுக்கு மே 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு மே 20 நள்ளிரவு வரையில் அவற்றை நடத்திச் செல்ல முடியும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர், பரீட்சையுடன் தொடர்புடைய  வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது மே 23 ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரையி நடைபெறவுள்ளது.