File Photo
கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மே 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட 22 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னன்கோன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் சீஐடியினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, குறித்த தாக்குதல் சம்பவம் திட்டமிடப்பட்டவை என்றும், அன்றைய தினம் தாக்குதல்களை தடுக்காது பார்த்துக்கொண்டு இருக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.