எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு அதன் ஊடாக அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகங்கள் நடைபெறுகின்றன.
இதேவேளை, எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.