November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய பிரதமர் பெரும்பான்மையை நிரூபிப்பரா?

பெரும் பரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷ பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் முதல்தடவையாக பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது.

முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது புதிய பிரதமர் தனக்கான பெரும்பான்மை ஆதரவை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவாக அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வரையில் புதிய பிரதமருக்கு 113 ற்கும் மேற்பட்டோர் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, புதிய பிரதி சபாநாயகர் தெரிவும் இன்று நடைபெறவுள்ளது.

அத்துடன், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இன்று தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள பாதுகாப்புத் தரப்பினர், பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் வீதியை மூடியுள்ளனர். குறித்த பகுதியூடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்கள் மாத்திரமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.