
சட்டவிரோதமாக உண்டியல் முறையில் பெருமளவான யூரோ நாணயத்தாள்களை மாற்ற முயன்ற ஒருவர் கொழும்பின் புறநகர் பகுதியான பெபிலியானவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 50,000 யூரோ நாணயத் தாள்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கொழும்பு பொரளையை சேர்ந்த 53 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 47,000 அமெரிக்க டொலர்களுடன் பொரளஸ்கமுவ பகுதியில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகக்கது.