November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டீசல் தட்டுப்பாடு: மட்டுப்படுத்தப்படும் பஸ் போக்குவரத்து!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி மே 17 ஆம் திகதி முதல் போக்குவரத்தில் 10 சதவீதமான பஸ்களே சேவையில் ஈடுபடும் நிலைமை காணப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வாரத்திற்குள் போதுமான டீசல் கிடைக்காவிட்டால் பஸ் பேக்குவரத்துக்கள் முற்றாக தடைபடும் அபாயம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையும் டீசல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.