மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதன்படி இந்த வாரத்திற்குள் புதிய பிரதமருடன், புதிய அமைச்சரவையை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 19 ஆவது திருத்தத்தை மீளச் செயற்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வரவும் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யவும் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.