ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
இன்று இரவு 9 மணிக்கு அவர் உரையாற்றுவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து நாட்டின் அரசியல் நெருக்கடி நிலமை தீவிரமடைந்துள்ளது.
அத்துடன் அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தொடர்கின்றன.
இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.