இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லலாம் என்றும் கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், இடைக்கால அரசின் பொறுப்பை ஆறு மாதங்களுக்கு ஏற்பதற்கு தயாராகவே தாம் இருக்கின்றோம் என்று அதன்போது அவர் கூறியுள்ளார்.
எனினும் ஏனைய கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசு அமைந்தால், அவ்வாறானதொரு ஆட்சி கட்டமைப்புக்கு எதிரணியில் இருந்து ஆதரவு வழங்குவதற்கும் தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது எனவும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.