File Photo
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காவே அவர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும், நிலைமை வழமைக்கு திரும்பியதும் அவர் செல்ல விரும்பும் இடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மகிந்த ராஜபக்ஷ இருந்த இடம் பலரால் சுற்றிவளைக்கப்பட்டதை தொடர்ந்தே அவரை திருகோணமலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கமல் குணரட்ண குறிப்பிட்டுள்ளார்.