எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமராக பதவியேற்கத் தயாராகவே இருக்கின்றார் என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இருக்கின்றார் என்றும் கிரியெல்ல கூறியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.