அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், வீடியோ தொழில்நுட்பம் ஊடாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது பாராளுமன்ற அமர்வு, புதிய பிரதமர் தெரிவு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.
இந்தக் கூட்டத்தை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடத்துவதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதும், பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு கூட்டத்தை வீடியோ மூலம் நடத்த சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.