November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வன்முறை நிலைமையின் போது துப்பாக்கிச் சூடு நடத்த படையினருக்கு அனுமதி!

வன்முறை நிலைமையின் போது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி பொதுச் சொத்துக்களை திருடுபவர்கள் மற்றும் நபர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து, இலங்கை முழுவதும் நேற்று முதல் அரச ஆதரவு தரப்பினருக்கு எதிராக வன்முறைகள் வெடித்துள்ளன.

இதன்போது மக்கள் அரசியல்வாதிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே முப்படையினருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.