திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை தலைமயகம் முன்னால் மக்கள் கூடிய ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களையடுத்தே மக்கள் அங்கே கூடியுள்ளனர்.
கொழும்பிலிருந்து விசேட ஹெலிகப்டர் மூலம் அவர்கள் குறித்த முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.
இதனையடுத்து அவர்கள் உள்ளே இருந்தால் வெளியே அனுப்ப வேண்டும் என்றும், அவர்களை அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல விடக் கூடாது என்றும் மக்கள் முகாமுக்கு முன்னால் போராட்டம் நடத்தி வருகின்றனர்.