தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களையடுத்து விமான நிலையங்களுக்கு அருகில் மக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் பிரதேசவாசிகள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வழியால் விமான நிலையத்திற்குள் செல்லும் அனைத்து வாகனங்களையும் பரிசோதிக்கும் அவர்கள் உள்ளே யார் இருக்கின்றார்கள் என்று சோதனையிட்ட பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.
இதேவேளை கொழும்பு இரத்மலானை விமான நிலையம், மத்தளை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.