January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Update: நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை முழுவதும் உரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தே ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

முதலில் கொழும்பின் சில பிரதேசங்களுக்கு மாத்திரமே ஊரடங்கை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் நிலைமையை கருத்திற்கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.