January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கலவர பூமியானது காலிமுகத்திடல்: போராட்டக் காரர்கள் மீது தாக்குதல்!

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அந்தப் பகுதிக்கு வந்த ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் குழுவொன்று அங்கு கோட்டாகோகமவில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை தீயிட்டு கொளுத்தியதுடன், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.

இதனால் காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு நிலைமையை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தற்போது அங்கு விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.