January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வரிசையில் காத்திருந்தாலும் கிடைக்காது”

போதுமான அளவுக்கு சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லாத காரணத்தினால் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதைய நிலைமையில் வீட்டுப் பாவனைக்கு எரிவாயுவை விநியோகிக்க முடியாத நிலைமையே காணப்படுவதாகவும், அத்தியாவசிய தேவைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மாத்திரமே சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் போதுமான எரிவாயு கையிருப்பு கிடைக்கும் வரை வீட்டுப் பாவனைக்கு எரிவாயுவை விநியோகிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எரிவாயு இறக்குமதிக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாகவும் லிட்ரோ தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எரிவாயு பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் மக்கள் வீதிகளை மூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.