January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எங்களுக்கு மகிந்த வேண்டும்”: அலரி மாளிகை செல்லும் ஆதரவாளர்கள்!

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பதவி விலகக் கூடாது என்று வலியுறுத்தி அவரின் ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு செல்கின்றனர்.

மகிந்த ராஜபக்‌ஷவை பதவி விலகுமாறு வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதன்படி பிரதமர் இன்றைய தினம் பதவி விலகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ”வேண்டுமென்றால் ஜனாதிபதி விலகட்டும்”, ”பிரதமர் நீங்கள் விலகத் தேவையில்லை” என்று அவரின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவர்கள் இன்று காலை முதல் அவருக்கு ஆதரவான அரசியல்வாதிகள் தமது பிரதேசங்களில் இருந்து மக்களை அழைத்துச் சென்று அலரிமாளிகைக்கு முன்னால் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களில் பலர் அலரி மாளிகைக்குள் சென்றுள்ளனர்.

இதேவேளை தாம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.