January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் வீதிகளை மூடி மக்கள் போராட்டம்!

கொழும்பில் பல பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தெமட்டகொட பகுதியில் பேஸ்லைன் வீதியை மறித்தும் மற்றும் கொம்பனித்தெரு பகுதியிலும் இரவு நேரத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டு பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தமக்கு எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும் வரையில் வீதியில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படாது என்று மக்கள் கூறுகின்றனர்.

இதனால் அந்த வீதிகள் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

இதேவேளை ஹைலெவல் வீதியில் நாவின்ன பகுதியில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்தப் போராட்டம் மாலை கைவிடப்பட்டுள்ளது.