January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிவாயு விநியோகத்தின் போது 100 சிலிட்டர்களை காணவில்லை!

கொழும்பு ஆமர்வீதி பகுதியில் லிட்ரோ எரிவாயு சிலிட்டர்களுடன் வந்த லொறியொன்றில் இருந்து சிலிண்டர்களை பணம் செலுத்தாது மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனால் 100 சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளதாக அங்கிருந்த எரிவாயு விநியோகஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நேற்று முதல் ஆமர் வீதி பகுதியில் மக்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர். இவர்கள் வீதிகளில் சிலிண்டர்களை வைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிய லொறியொன்று அங்கு வந்த நிலையில், அந்த லொறி நிறுத்திய பின்னர் சிலிண்டர்களை விநியோகிக்க ஆரம்பித்த போது, முண்டியடித்துக்கொண்டு முன்னால் சென்று லொறியில் ஏறிய மக்கள் புதிய சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். அவர்களில் பலர் வெற்றுச் சிலிண்டர்களையும் அங்கு வைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.