January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்த ஜயஶ்ரீ மகாபோதியில் வழிபாடு!

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அனுராதபுரத்திலுள்ள ஜயஶ்ரீ மகாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

இன்று முற்பகல் பலத்த பாதுகாப்புடன் பிரதமர் அனுராதபுரம் சென்றிருந்தார்.

இவர் ஜயஶ்ரீ மகாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் அதனை தொடர்ந்து ருவான்வெலிசாய விகாரைக்கு சென்று வழிபட்டார்.

பிரதமர் அங்கு சென்றிருந்த போது அங்கு பெருமளவான பக்கதர்கள் வருகை தந்திருந்ததுடன், சிலர் பிரச்சனைகளுக்கு பிரதமர் கூடிய விரைவில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்று சத்தமிட்டு கூறினர்.

திங்கட்கிழமை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்‌ஷ பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.