January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திங்கள் முதல் தொடர் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் திட்டம்!

மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தாமதிக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

மே 9 ஆம் திகதி முதல் ஒருவார காலத்திற்கு இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மே 17ஆம் திகதி பொதுமக்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மே 11 ஆம் திகதி மீண்டும் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.