பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போதே பிரதமரிடம் அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் பதவி விலகுவதற்கு பிரதமர் தயக்கம் வெளியிட்ட போதும், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு இடமளித்து பதவி விலக வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, பதவி விலக இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை புதிய அமைச்சரவையை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி அடுத்த வாரத்தில் புதிய பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.