அக்கரைப்பற்று பிரதேசத்தில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள பொலிஸ் காவலரண் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்திய போது அங்கு அமைதியின்மை உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது அவ்விடத்தில் பொதுமக்கள் கூடியுள்ள நிலையில், பொலிஸ் குழுக்களும் அந்த இடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வேளையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அங்கு ஏற்பட்ட அமைதியின்மையின் போது, பொலிஸார் உட்பட 16 பேர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.