அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை முழுவதும் இன்று ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அரச, தனியார் துறைகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதுடன், இதற்கு நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் வர்த்தகர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதனால் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளதுடன், நகரங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை தனியார் பஸ் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. அத்துடன் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று இ.போ.ச பஸ் சங்கங்கள் சில போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஹர்த்தாலுக்கு பின்னர் முன்னெடுக்கப்படும் பெரிய ஹர்த்தால் போராட்டமாகவே இது பார்க்கப்படுகின்றது.