January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற வீதியில் உருவான ‘ஹொரு கோ கம’

அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு அருகில் போராட்டம் நடத்தி வரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டம் நடத்தும் பகுதியை ‘ஹொரு கோ கம’ (திருடர்கள் போ கிராமம்) என்று பெயரிட்டுள்ளனர்.

ஏற்கனவே ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ‘கோட்டா கோ கம’ அமைக்கப்பட்டுள்ளதுடன், பிரதமர் அலுவலகமான அலரிமாளிக்கைக்கு அருகில் ‘மைனா கோ கம’ அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்கு போக வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் பாராளுமன்றத்திற்கு அருகில் ‘ஹொரு கோ கம’ அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நுகேகொட பகுதியில் இருந்து பேரணியாக பாராளுமன்றம் நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் சென்றனர். இதன்போது பொலிஸார் பொல்துவ சந்தியில் அவர்களை வழிமறித்து கண்ணீர் புகை தாக்குதல் நடத்தி விரட்டியடிக்க முயன்ற போதும், மாணவர்கள் அங்கிருந்து செல்லாது தங்கியுள்ளனர்.

பொலிஸார் போட்ட வீதித் தடைகளையே பயன்படுத்தி மேடைகளை அமைத்து அவர்கள் அங்கு தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.