அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பாராளுமன்றத்திற்கு அருகில் கண்ணீர்புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நுகேகொடவில் இருந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியிருந்தனர்.
இவர்கள் பாராளுமன்றம் நோக்கி பயணித்த நிலையில், பத்தரமுல்லை பொல்துவ சந்திப்பகுதியில் வீதித் தடைகளை போட்டு அவர்களை பொலிஸார் மறித்தனர்.
இவ்வேளையில் வீதித் தடைகளையும் தள்ளி வீழ்த்திவிட்டு முன்னால் செல்ல முயன்ற போது மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.