அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை முழுவதும் மே 6 ஆம் திகதி பூரண ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி 6 ஆம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டணி அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகிக் கொள்வதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதேவேளை தாமும் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து இன்று நள்ளிரவு முதல் விலகிக் கொள்வதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.