November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பதவி விலகத் தீர்மானிக்கவில்லை”

தான் பதவி விலக மாட்டேன் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளதாக சபை முதல்வரான அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாகவும், பாராளுமன்றத்தில் அவர் இன்று அது தொடர்பில் அறிவிப்பார் என்றும் கடந்த தினங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் பிரதமர் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அவ்வாறாக எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை.

இந்நிலையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டிருந்த நிலையில், இதன்போது தான் பதவி விலகத் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ளதாக தினேஸ் குணவர்தன ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இதேவேளை 5 அல்லது 6 ஆம் திகதி பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளதாகவும் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.