January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றத்திற்கு அருகில் பதற்றமான நிலைமை!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தால் பாராளுமன்றத்திற்கு அருகில் பதற்றமான நிலைமை நிலவுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு அருகில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் ஆர்ப்பாட்டத்தால் பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதிக்கு அருகில் வீதியை பொலிஸார் வீதித் தடைகளை போட்டு மூடியுள்ளனர்.

இதனால் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகல் நிலைமை உருவாகியுள்ளது.

இதேவேளை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.