ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையையும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்துள்ளனர்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று சபாநாயகரை சந்தித்து இவற்றை கையளித்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் தினங்களில் இந்த பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மக்களுடன் இருப்பவர்கள் யார் என்பதனை அறிந்துகொள்ள முடியுமாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.