January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபல அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளை ஜே.வி.பி அம்பலப்படுத்தியது!

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகப் பெரிய ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் அந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதில் பிரபல அரசியல் தலைவர்கள் முதல் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் வரையில் பல்வேறு நபர்கள் செய்த ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை ஆவணங்களை அவர் ஊடகங்களுக்கு காட்சிப் படுத்தியுள்ளார்.

ஜே.வி.பியின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.